Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்தை இயக்கும் 18+ இயக்குனர்! மீண்டும் தன் ரூட்டுக்கு திரும்புகிறாரா?

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (10:42 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு தனது சினிமா கேரியரின் இரண்டாவது இன்னிங்ஸில் புத்துணர்ச்சியாக இயங்கி வருகிறார். அதன் முதல் படமாக மாநாடு படத்தை முடித்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் 10 தல, நதிகளில் நீராடும் சூரியன் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ்க்கு ஒரு படம் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின.

இது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது. அந்த படத்தை யாமிருக்க பயமே, மற்றும் கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டி கே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. டி கே வின் படங்களில் 18+ விஷயங்கள் மிக அதிகமாக இருக்கும். சிம்பு இப்போது அனைவருக்குமான படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் தன்னுடைய பழைய டபுள் மீனிங் படங்களுக்கு திரும்புகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments