Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டிற்கு இணையாக மாபெரும் சாதனை படைத்த ‘ரவுடிபேபி’

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (15:59 IST)
தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடல் ஹாலிவுட் பாடல்களுக்கு  இணையாக அதேநேரத்தில் தென்னிந்திய மொழி பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்ற ஒரே பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் படைத்துள்ளது.

 
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றிநடைபோட்ட படம் மாரி 2. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க அவர்களுடன் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்தின் மெகா ஹிட்டிற்கு வழிவகுத்தனர். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததோடு குழந்தைகளையும் வெகுவாக ஈர்த்தது. 
 
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்பாடலை நடிகர் தனுஷ் வரிகள்எழுதி பாடியிருந்தார். இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் இப்பாடல் யு டியூப்பில் கடந்த 157 நாட்களில் மட்டும் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது ரவுடி பேபி பாடல் எனப்தையும் தாண்டி ஹாலிவுட் பாடல்களுக்கு இணையாக மெகா சாதனை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments