இன்னும் என்னை கொலவெறி பாடல் விடவில்லை… துபாய் நிகழ்ச்சியில் தனுஷ் பேச்சு!

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:40 IST)
தனுஷ் அனிருத் கூட்டணி இணைந்த ‘3’ படத்தில் இடம்பெற்ற 3 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் இருந்து பொரு பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்றது அந்த பாடலுக்காகதான்.  அந்த பாடலைப்பாடி உலகப் புகழ் பெற்ற நடிகர் தனுஷ் செல்லும் இடங்களிலெல்லாம் அந்த பாடலைப் பாட சொல்லி நச்சரிக்கப்பட்டார்.

அந்த பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நாங்கள் அந்த பாடலை விளையாட்டாக உருவாக்கினோம். கேட்டபோது வேடிக்கையாக இருந்தது. அப்போது நான் இசையமைப்பாளரிடம் வேடிக்கையானது கூட சில சமயம் வொர்க் அவுட் ஆகிவிடும் என்றேன்.

பின்னர் அந்த பாடலை ரெக்கார்ட் செய்தோம். அதை ஷூட் செய்தோம். படத்தில் இணைத்தோம். அந்த பாடலை விட்டு நான் நகர்ந்துவிட்டாலும், அந்த பாடல் இப்போது வரை என்னை விடவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments