ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்ஷியோடு கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய தோனி “சென்னைக்கும் எனக்கும் நீண்ட பந்தம் உருவாகிவிட்டது. சென்னையில் தான் என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். சென்னையில்தான் என்னுடைய டெஸ்ட் இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோரை அடித்தேன். சென்னை மண் எனக்கு எப்போதும் முக்கியமானது. இப்போது என்னுடைய முதல் தயாரிப்பும் தமிழில்தான் நடக்கிறது. சென்னை மக்களால் நான் எப்போதே தத்தெடுக்கப் பட்டுவிட்டேன்” எனப் பேசினார்.
எல் ஜி எம் திரைப்படம் ஜூன் மாத இறுதியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று வெளியான டிரைலர் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.