இயக்குனர் அமீர் நடிக்கும் மாயவலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர், தற்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த வடசென்னை, மாறன் ஆகிய திரைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன.

இதையடுத்து இப்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்போது அமீர் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமாக மாயவலை உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் அமீருடன், ஆர்யாவின் தம்பி சத்யாவும், நடிகை சஞ்சிதா ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments