Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி மாதிரியெல்லாம் இல்லை… ரஜினியேதான் – சிவகார்த்திகேயனை ஓவராக புகழ்ந்த மிஷ்கின்!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (07:55 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷ்வா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய மிஷ்கின் “நான் முதன் முதலில் சிவகார்த்திகேயனைப் பார்த்தபோது பெரிதாக சாதிக்க வேண்டும் எனக் கூறினேன். அவர் இப்போது சாதித்து விட்டார். சரிதா  மேடம் என்னிடம் சிவகார்த்திகேயன் ரஜினி போலவே அடக்கமாக இருக்கிறார் என சொன்னார். ரஜினி மாதிரியெல்லாம் இல்லை. ரஜினியேதான்” என ஓவராக ஐஸ் வைத்து பேசியுள்ளார். விழாவில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

எங்க இயக்குனரக் கலாய்ச்சதுக்கு உங்கள சும்மா விடமாட்டேன் – சிம்பு ஜாலிப் பேச்சு!

சூர்யாவுக்குப் பெரும் தொகையை சம்பளமாகக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

’என் வீட்டை ஆர்யா இடிச்சிட்டான்…” – சந்தானம் பகிர்ந்த ஜாலி தகவல்!

ப்ரதீப் ரங்கநாதனுக்கு இவ்ளோ பெரிய Fan Base ஆ? தண்ணீர் பந்தல் திறந்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments