லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட லியோ படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் விஜய்யைப் போற்றியும் ரஜினியைத் தாழ்த்தியும் பேசியது அங்கிருந்தவர்களையே முகம்சுளிக்க வைத்தது.
இதனால் லோகேஷ் இப்போது ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் ரத்னகுமார் கழட்டிவிடப்பட்டுள்ளார். அதே போல லோகேஷ் தயாரிப்பில் அவர் லாரன்ஸை வைத்து இயக்க இருந்த படத்தின் இயக்குனரும் மாற்றப்பட்டுள்ளார். ஏனென்றால் தனது ஆதர்சமான ரஜினிகாந்தை கிண்டல் செய்து பேசிய ஒருவரோடு இணைந்து படம் பண்ண தான் விரும்பவில்லை என லாரன்ஸ் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது லியோ படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதைப் பற்றி பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ரத்னகுமார். அதில் “படத்தின் ரிலீஸின் போது அதைப் பற்றி பேசப்பட்டவை இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. ஒவ்வொரு கமாவும் ஒரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைச் சுற்றி நடந்த இம்சையை ரசித்தேன். நான் உட்பட ரசிகர்களின் இதயத்துக்கு நெருக்கமான படம் அது” எனக் கூறியுள்ளார்.