Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலை இயக்குனர் சந்தானத்தின் மறைவுக்கு இயக்குனர் வசந்தபாலன் உருக்கமான இரங்கல்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:20 IST)
கலை இயக்குனர் சந்தானம் நேற்று முன்தினம்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டணம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் கலை இயக்குனர் சந்தானம்.  சமீபத்தில் வெளியான சர்கார் மற்றும் தர்பார் ஆகிய படங்களில் பணியாற்றிய அவர் தற்போது வரலாற்று கால படமான 1947 ஆகஸ்ட் 16 என்ற படத்தில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சந்தானத்துக்கு வயது 50.

இந்நிலையில் அவரின் மறைவு குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். அதில் “நேற்றிரவு திரைப்படக் கலை இயக்குநர் சந்தானம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

காவியத்தலைவன் திரைப்படத்தில் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்தார். பழைய நாடக நடிகர் ஆர்.எஸ்.மனோகர் துவங்கி பல நாடகக் கம்பெனிகளில் ஏறி இறங்கி நாடகக்குழுவிற்கு தேவையான அத்தனை நாடகப்பொருட்கள், விளம்பர நோட்டீஸ்கள், திரைச்சீலைகளைச் சேகரித்து வந்தார். பீரியட் படம் என்பதால் பார்த்து பார்த்து அக்கறையுடன் வேலை செய்தார். காவியத்தலைவன் திரைப்படத்தை தமிழக அரசு விருதுக்கு அனுப்ப நான் சோம்பிக் கிடந்த போது அவரே விருப்பப்பட்டு அனைத்து வேலைகளையும் செய்து அனுப்பி வைத்தார்

காவியத்தலைவன் திரைப்படத்திற்கு சிறந்த கலை இயக்குநர் விருது உட்பட 10 விருதுகள் கிடைத்தன. தமிழக அரசு விருதுடன் என் படப்பிடிப்பு தளத்திற்கு தேடி வந்து எனக்கு நன்றி கூறி ஆரத்தழுவி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆயிரத்தில் ஒருவன் உட்பட இயக்குநர் செல்வராகவனின் திரைப்படங்கள், இயக்குநர் முருகதாஸின் சமீபத்திய அத்தனை திரைப்படங்களிலும் கலை இயக்குநராக பணி புரிந்தவர். என் கண்ணீர் அஞ்சலி” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments