பிரபல பாடகர் கேகே சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேகேவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் டாக்டர் ஒருவர் கருத்துக் கூறியிருப்பதாவடு:
'கேகேவின் இதயத்தின் இடதுபக்க பிரதான கரோனரி தமனியில் மிகப்பெரிய அடைப்பு ஒன்றும், பல்வேறு பிற தமனிகள் மற்றும் துணை தமனிகளில் சிறிய அடைப்புகளும் இருந்தன. இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட அதிகப்படியான உற்சாகத்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிரை பறித்துள்ளது
பாடகர் கேகே மயங்கி விழுந்தவுடனேயே யாராவது அவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.