Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

Mahendran
வியாழன், 19 செப்டம்பர் 2024 (16:05 IST)
நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் YouTube-ல் பேட்டி அளித்திருந்த டாக்டர் காந்தராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார். பேட்டி கொடுத்ததற்காக வருத்தப்படுகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். 
 
தனியார் தொலைக்காட்சிகளில் சினிமா குறித்து பேட்டி அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நடிகைகளின் அந்தரங்கம் குறித்து பல விஷயங்களை டாக்டர் காந்தாராஜ் பேசிக்கொண்டிருந்தார்.
 
இந்த டாக்டர் காந்தாராஜ் மீது நடிகை ரோகிணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆதாரம் இல்லாமல் டாக்டர் காந்தாராஜ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசுகிறார், என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து நடிகைகளையும் கொச்சைப்படுத்தியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரோகிணி தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராக இருந்த நிலையில், டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். "யாரையும் காயப்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கம் அல்ல, இருப்பினும் பேட்டி கொடுத்ததற்காக வருந்துகிறேன், மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments