Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷ்யம் 3 ஆம் பாகத்துக்கான அப்டேட்டைக் கொடுத்த தயாரிப்பாளர்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:30 IST)
மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணியின் ஹிட் படமான திரிஷ்யம் 3 ஆம் பாகம் வர உள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அந்த வெற்றியை அடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என முந்தைய இரண்டு படங்களின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் இதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments