துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 21 அக்டோபர் 2025 (10:04 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் நடிகராக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட்களைக் கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். மலையாளம் தாண்டியும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன.  கடந்த தீபாவளிக்கு அவர் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் பேன் இந்தியா ஹிட்டானது.

இதையடுத்து துல்கர் சல்மானின் அடுத்த பேன் இந்தியா ரிலீஸாக ‘காந்தா’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படம்1960 களில் சினிமாப் பின்னணியில் உருவாகும் ஒரு பீரியட் படமாக உருவாகி வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்ட லோகா படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது நவம்பர் 14 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்க, துல்கர் சல்மானே தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments