Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்குக் காரணம் கலைஞர் மேல் கொண்ட அன்புதான் – அமைச்சர் எ வ வேலு!

vinoth
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:34 IST)
சமீபத்தில் நடந்த கலைஞர் பற்றிய வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார்.

அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் புத்தகத்தை எழுதிய எ வ வேலு பேசும்போது ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “ஷங்கர் முதல்வன் படத்தை எடுத்த போது அதில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். அதற்குக் காரணம் பெரியவர் கலைஞர் முதல்வராக இருக்கும்போது நான் இப்படி ஒரு படத்தில் நடிக்கக் கூடாது என்ற கலைஞர் மேல் வைத்த அன்புதான் காரணம்.” எனப் பேசியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’என் இதயம் நிரம்பிவிட்டது..” – சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் பார்த்துப் புகழ்ந்த பிரபலம்!

மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் ‘கேங்கர்ஸ்’… ஒரு வாரக் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அளவுக்கதிகமான வன்முறை… இருந்தும் கொண்டாடும் ரசிகர்கள்… நானியின் ‘ஹிட் 3’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

“என்னுடைய சில படங்கள் எனக்குக் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தன… அதற்குப் பிராயச்சித்தமாக…” அஜித் பதில்!

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான ‘டூரிஸ்ட் பேமிலி’… முதல் நாள் வசூல் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments