நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

vinoth
சனி, 26 ஜூலை 2025 (13:27 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.  நேற்று ரிலீஸான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் அறியப்படும் நடிகராக இருக்கும் ஃபஹத் அடுத்து ஒரு நேரடி இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று அவர் நடிப்பில் உருவான ‘மாரீசன்’ திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் “எனது நடிப்பு பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால் நான் பார்சிலோனாவுக்கு சென்று uber ஓட்டுனராகப் பணியாற்றுவேன். மக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்து செல்வது அழகான வேலை. ஒருவரின் பயணத்தில் பங்கேற்பது மிகவும் அழகான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments