Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கோயில் சிலைக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (16:20 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ரஜினிகாந்த். இவர்,  இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் சிறிய கேரக்டரில்  நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர், பில்லா, தில்லு முல்லு,  ஜானி, முள்ளும் மலரும், எஜமான், எந்திரன், அண்ணாத்த  உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ரிலீசாகி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து, த.செ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இன்று தன் 73 வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு சினிமாத்துறையினர். அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப்  பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ள  நிலையில், மதுரை திருமங்கலைத்தைச் சேர்ந்த கார்த்திக் நடிகர் ரஜினிகாந்துக்கு ' அருள்மிகு   ஸ்ரீ ரஜினி கோயில் 'என்ற பெயரில் ஒரு கோயில் கட்டி, 250 கிலோ கருங்கல்லில் அவருக்கு சிலை வைத்து  தினமும் வழிபட்டு வருகிறார்.

இன்று ரஜினியின் பிறந்த நாளையொட்டி, இந்தக் கோயிலில் உள்ள ரஜினிகாந்த் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments