Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சந்தீப் கிஷன்
vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (09:34 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஃபரியா அப்துல்லா நடிக்கிறாராம். இவர் தெலுங்கின் சூப்பர் ஹிட்டான ஜதி ரத்னலு படத்தில் நடித்து பிரபலமானவர். விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

இனி STRதான் உலக நாயகன்.. கமல் சார் எங்களுக்காக இத பண்ணனும்! - கூல் சுரேஷ் வைத்த கோரிக்கை!

இதைதான் உங்கள் பெண்ணியம் சொல்கிறதா?... தீபிகா படுகோனை மறைமுகமாக சாடிய ‘அனிமல்’ இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments