Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:50 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்தது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பேசியுள்ளார். அதில் “போதிய பணம் இல்லாததால் இந்த படத்தை முடிக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் அப்போது படங்களில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டுதான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்தேன். இனிமேல் தொடர்ந்து முழுக்க முழுக்க இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். இனிமேல் நடிக்கப் போவதில்லை ” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அவர் அடுத்து சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏறகனவே அவர்கள் இணைந்த ‘காக்க காக்க’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments