Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகை என்பதை நிரூபித்த காயத்ரி ரகுராம்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் தான் ஒரு விஜய் ரசிகை என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது 'மெர்சல்' படத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தான் ஒரு விஜய் ரசிகை என்பதை நிரூபணம் செய்துள்ளார்.



 
 
அதிலும் அவர் பதிலடி கொடுத்தது தமிழிக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழிசை செளந்திரராஜனுக்கு தனது டுவிட்டர் மூலம் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
 
சினிமாவை சினிமாவாக ஒரு பொழுதுபோக்காக பாருங்கள். படத்தில் வரும் நடிகர் பேசும் வசனங்களை அவர் எழுதுவதில்லை., அவர் ஒரு உண்மையான டாக்டரோ, மேஜிக்மேனோ இல்லை. சினிமா, அரசியல் இரண்டிலும் விமர்சனங்களை ஏற்று கொள்ள வேண்டும். கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. மேலும் இந்த படம் சென்சாரில் சான்றிதழ் வாங்கியுள்ளது என்று டுவீட் செய்துள்ளார்.
 
தமிழிசை செளந்திரராஜனுக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ள காயத்ரி ரகுராம் பாஜகவின் நிர்வாகிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments