Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தில் இணைந்தது குறித்து ஜிப்ரான் வெளியிட்ட பதிவு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:13 IST)
நடிகர் அஜித் நடிக்கும் படத்துக்கு துணிவு என டைட்டில் அறிவிக்கபட்டு, முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போஸ்டரில் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர் “உங்கள் வாழ்த்துகளுடனும் கடவுளின் ஆசியுடனும்” எனக் கூறி துணிவு படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். முதல் முறையாக ஜிப்ரான் அஜித் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக வலிமை படத்தின் பின்னணி இசைப் பணிகளை ஜிப்ரான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments