Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி லோகேஷ் படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்… வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படமும் லோகேஷின் முந்தைய படமான லியோ போல ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக உருவாக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர் அங்கமாலி டைரீஸ், சர்கார், ஜல்லிகட்டு மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments