Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித் படத்தில் ஹீரோவாக குரு சோமசுந்தரம்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (14:22 IST)
தமிழில் ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா என ஆரம்பத்தில் கலக்கிய குரு சோமசுந்தரம், அதன் பின்னர் அவரின் திறமைக்கு ஏற்ற வேடங்கள் கிடைக்காமல் தடுமாறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மின்னல் முரளி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில் ஷிபு என்ற ஆண்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

மின்னல் முரளி ஹிட்டால் மலையாளத்தில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஜோக்கர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, தினகரன் என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக சஞ்சனா நடராஜன் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அவர் நடிப்பில் இந்தியன் 2, மோகன் லால் இயக்கும் பரோஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் குனச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

பூஜா ஹெக்டேவின் அழகிய புகைப்பட தொகுப்பு!

வித்தியாசமான உடையில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சிறு வயதில் இருந்தே அவர் எனக்கு ரோலக்ஸ்… அண்ணன் சூர்யா பற்றி கார்த்தி ஜாலி கமெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments