அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் ஹாலிவுட் ஸ்டுடியோ!

vinoth
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (14:50 IST)
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இதனால் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனரானார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருனாள் தாக்கூர் என பல ஹீரோயின்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது. அதனால் இந்த படத்தை இந்தியாவைத் தாண்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதனால் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments