Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கோடி தருகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என கதறும் பிக்பாஸ் போட்டியாளர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:48 IST)
இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 11 நடந்து வருகிறது. இதனை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியே விட்டால் ரூ. 2 கோடி தர தயார் என்று தெரிவித்துள்ளார்.

 
இந்தி பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி நடிகை ஷில்பா ஷிண்டேவுக்கும், விகாஸ் குப்தாவுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.  லக்சுரி பட்ஜெட்டின்போது ஷில்பா ஷிண்டே, விகாஸ் குப்தா இடையே அடிதடியாகிவிட்டது. இதையடுத்து விகாஸ் பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லும் கதவுகளில் ஒன்று பூட்டாமல்  இருந்தது. அந்த வழியாக விகாஸ் வெளியே சென்றவரை பிக்பாஸ் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இனிமேல் நான் பிக்பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன். ஒப்பந்தத்தை மீறி பாதியில் வெளியே செல்ல ரூ. 2 கோடி அபராதமும் தந்து விடுகிறேன் என்று விகாஸ் கெஞ்சியுள்ளார். அதற்கு பிக்பாஸ் சம்மதிக்கவில்லை. எனவே இந்த சனிக்கிழமை  சல்மானிடம் இருந்து விகாஸுக்கு செம கச்சேரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments