Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்காக மட்டும் இதை செய்வேன்; சிவகார்த்திகேயன் பேச்சு

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (12:43 IST)
சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து இன்று சினிமாவில் ஒரு மாஸ் நடிகராகிவிட்டார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கென ஒரு பெரிய ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில்  சிவகார்த்திகேயன் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசுகையில், கூடிய விரைவில் தான் குழந்தைகளுக்காக மட்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் குழந்தைகளுக்காக மட்டும் விஜய்  புலி என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது, அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தனக்கு குழந்தை நட்சத்திரங்கள் அதிகம்  இருப்பதை தெரிந்துகொண்டு, இப்படி ஒரு முடிவெடுத்து இருப்பார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments