Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படை தலைவன் படத்தில் ரீமிக்ஸ் பாடலை பயன்படுத்தும் இளையராஜா… அதுவும் இந்த விஜயகாந்த் பட பாடலா?

vinoth
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:56 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா விஜயகாந்துக்காக தான் மெட்டமைத்த ‘நீ பொட்டு வச்ச தங்க கொடம்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்த உள்ளாராம். படத்தின் முக்கியக் காட்சிகளில் இந்த பாடல் பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன்? நம்பர் ஒன் இயக்குனர் திட்டம்..!

இளையராஜாவுக்காக ‘குட் பேட் அக்லி’ பட ஓடலை.. தல தான் காரணம்: பிரேம்ஜி

சினிமாவில் சான்ஸ் இல்லையா? டான்னு பேமெண்ட் தரும் தொழிலை சொல்றேன்: சனம் ஷெட்டி

ஏஐ மூலம் ரம்யா சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய வீடியோ? கேஸ் போடுவேன் என எச்சரிக்கை..!

‘விஸ்வாசம்’ படத்தின் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’.. வெற்றிப் பாதைக்குத் திரும்பிய AK

அடுத்த கட்டுரையில்
Show comments