Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலையில் 60 தியேட்டர்களில் செம்ம மாஸ் காட்டிய ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (11:14 IST)
எத்தனையோ தோல்வி, எத்தனையோ காயங்களை கடந்த சிம்புவை தாங்கி பிடிப்பது அவரது ரசிகர் கூட்டம் தான். தானா சேர்ந்த இந்த கூட்டத்தால் செம்ம மாஸ் ஓப்பனிங் இன்று. இதற்கு சிம்பு மட்டுமல்ல, மணிரத்னம், விஜய் சேதுபதியும் முக்கிய காரணம்.
இன்று திரைக்கு வந்திருக்கும் செக்கச் சிவந்த வானம் சுமார் 60 தியேட்டர்களில் அதிகாலை 5 மணி ஷோ போடப்பட்டது. எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல்.  கூட்டத்தில் இருந்து உரக்க பாய்ந்த குரல்களில் பல சிம்புவின் ரசிகர் கூட்டம்தான். இன்னொரு பக்கம், விஜய் சேதுபதிக்கான கூட்டம் அதிகாலை வேளையில்  அதிரவிட்டது.
 
வேங்கை மகனை தளபதி ஆக்கி, நம்மவரை வேலு நாயக்கராக்கி, தமிழ் சினிமா கதையை, உலகம் முழுவதும் போட்டு காட்டிய மணிரத்னம், பழைய பார்முக்கு அதே வேகத்தில் வந்துள்ளாரா என்பது இன்றே தெரிந்துவிடும். எது எப்படியோ? சோஷியல் மீடியாக்களில் இப்படி தான் கதை இருக்கும் என ஒரு மாதமாக பேச  வைத்தார் மணிரத்னம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments