Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி தோழி பூர்ணிமாவை புறக்கணித்தது ஏன்? இந்துஜாவின் இன்ஸ்டா பதிவு..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (12:21 IST)
சமீபத்தில் பார்க்கிங்’ படத்தின் புரமோஷன் விழாவுக்காக ஹரிஷ் கல்யாண் உடன் இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது பூர்ணிமாவிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை.

பூர்ணிமா மற்றும் இந்துஜா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் கல்லூரி காலத்திலிருந்து நெருக்கமாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இந்துஜா, மற்ற போட்டியாளர்களிடம் பேசுவது போல் சாதாரணமாகத்தான் பூர்ணிமாவிடம் பேசினார்.

பூர்ணிமா செய்த தவறை கூட தோழி என்ற முறையில் இந்துஜா சுட்டிக்காட்டவில்லை. பார்க்கிங்’ திரைப்படத்தின் புரமோஷனுக்கு வந்து அனைத்து போட்டியாளர்களை சந்தித்தது போல் பூர்ணிமாவையும் சந்தித்து விட்டு அவர் சென்று விட்டார்.

இது குறித்து மிகவும் வருத்தத்துடன் பூர்ணிமா விஷ்ணுவிடம் புலம்பி இருந்தார்.  இந்த நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்துஜா கூறியபோது, ‘ சரியானதை செய்ய நேரம் எப்போதும் சரியானது’ என்று கூறி இருக்கிறார்.  அவரது இந்த பதிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

தோழியாக இருந்தாலும் தவறான பாதையில் செல்லும்  ஒருவரை ஊக்கப்படுத்த கூடாது என்று அதனால்தான் பூர்ணிமாவை அவர் தவிர்த்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில்  தோழி  தவறான பாதையில் செல்வதை சொல்லி இந்துஜா திருத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments