Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களுக்குப் பிறகு கமலுக்கு வில்லனாகும் சத்யராஜ்… திடீர் ட்விஸ்ட்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:39 IST)
இந்தியன் 2 படத்தில் நடிகர் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. 1980 களில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜ் கமலுடன் நடித்த காக்கி சட்டை திரைப்படம் சத்யராஜுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.

ஆனால் அதன் பின்னர் கதாநாயகனாக பல ஆண்டுகள் கலக்கிய சத்யராஜ் இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சத்யராஜ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments