கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகள் 5 மணிநேரத்துக்கு மேல் வந்ததால் இப்போது படத்தை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளனர். முதலில் இந்தியன் 3 படம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு பாடல் காட்சியை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக சென்னையின் சில பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் இந்தியன் தாத்தா படம் வரைந்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தில் ஒரு சில காட்சிகளில் சிறு வேடங்களில் நடித்தவர்களைக் கூட அவர்களின் சொந்த குரலிலேயே டப்பிங் பேசவைக்கின்றனராம். படத்தில் நடித்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் மறைந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு மட்டும் வேறு டப்பிங் கலைஞர்களை வைத்து டப்பிங் பேச வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.