Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்தியன் 2’ கைவிடப்படுகிறதா? ஷங்கரின் அடுத்த திட்டம் என்ன?

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (07:23 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ திரைப்படம் கைவிடப்படுவதாக கோலிவுட்டில் செய்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வந்த ’இந்தியன் 2’ படத்திற்கு ஆரம்பம் முதலே பிரச்சனைகள் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாகவும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை 
 
ஆனால் தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் இந்த படத்தை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ’இந்தியன் 2’ படத்தை கைவிட்டு வேறு ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
நான்குக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் அந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஒரே நேரத்தில் அவர் ஐந்து மொழிகளில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில்’இந்தியன் 2’ படப்பிடிப்பு கைவிடப்படாது என்றும் மீண்டும் தொடரும் என்றும் ’இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments