Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இன்று நேற்று நாளை’ பார்ட் 2 உருவாகிறது

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (09:57 IST)

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் சி.வி.குமார்  கூறியுள்ளார்.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு  வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’.  டைம் மிஷின் மூலம் கடந்த காலம் மற்றும் எதிர்காலங்களுக்குச் சென்று என்ன நடக்கிறது என்பது போல  இந்த படத்தின் கதை இருந்தது. இதற்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில்  விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு கீழே, ‘வாழ்த்துகள் சார். நானும் கருணாகரனும் இரண்டாம் பாகத்தில் இருக்கிறோமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் விஷ்ணு விஷால்.

அதற்குப் பதிலளித்துள்ள சி.வி.குமார், ‘நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி அது நடக்கும்?’ என  கூறினார். ஆகவே விரைவில் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஆர்.ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து  சயின்ஸ் பிக்‌ஷன் படம் ஒன்றை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments