Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தொழிலதிபரை காதலிக்கும் பாகுபலி ரானா!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (18:07 IST)
பிரபல தொழிலதிபரை காதலிக்கும் பாகுபலி ரானா!
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ராணா டகுபதி உடன் அனுஷ்கா, த்ரிஷா உள்பட பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள் என்பதும் அதன் பின்னர் அது வெறும் வதந்தி என்பதும் தெரிய வந்தது என்பதும் கோலிவுட் திரையுலகம் அறிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ராணா டகுபதி தனது காதலியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். பிரபல பெண் தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் என்பவர்தான் தனது காதலி என்றும் அவர் தனது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ராணா டகுபதியின் காதலி இந்த பெண் தொழிலதிபர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
தற்போது இரு தரப்பிலும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரானா-மிஹேகா பஜாஜ் காதல் குறித்த தகவல் வெளி வந்தவுடன் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்