Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 'லியோ' பட ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (16:46 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து  செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் லியோ படத்திற்கு   நேற்று முன்தினம்  சென்சார் சான்றிதழ் வழங்கினர். அதன்படி, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லியோ பட டிரைலர் அறிவித்திருந்தபடி  நேற்று  மாலை 6: 30 மணிக்கு  சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீஸானது.

அனிருத்தின் இசையில், அன்பறிவின் ஸ்டண்டில் விஜய்யின் அதிரடி ஆக்சனில், சஞ்சய் தத், அர்ஜூனின் அசத்தல் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.  அனைத்து மொழிகளிலும் பல  மில்லியன் வியூஸை கடந்துள்ளது  இந்த டிரைலர் . இது மேலும் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது

வரும் அக்டோபர் 19 ஆம் தேதி  லியோ  பான் இந்தியா படமாக தியேட்டரில் வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், லியோ பட ஸ்டிக்கர், மற்றும் போஸ்டர்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து  மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, லியோ பட ஸ்டிக்கர், மற்றும் போஸ்டர்களை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது’’  என்று  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments