Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்காமல் சுடப்பட்டதா லியோ? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:41 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகி நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது. இந்நிலையில் படம் பார்த்த பலரும் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் காப்பி என கூறி வருகின்றனர்.

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்துக்கு ட்ரிப்யூட் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்த படக்குழுவினரிடம் அனுமதி பெற்று ரீமேக் செய்யப்பட்டிருக்கும் என கருதிய நிலையில், உரிய அனுமதி பெறாமல்தான் லோகேஷ் லியோ படத்தை உருவாக்கியுள்ளார் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments