Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘லைகர்’ ஜெயம் ரவி படத்தின் ரீமேக்கா?... விஜய் தேவரகொண்டா பதில்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:38 IST)
லைகர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக நடிகர் ஆர் கே சுரேஷ் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் மாமனிதன் திரைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம் குமரன் படத்தின் ரீமேக்கா என்ற  கேள்வியை பத்திரிக்கையாளர்கள் விஜய் தேவரகொண்டாவிடம் எழுப்பினர். அதற்கு “பாக்ஸிங் சம்மந்தமான கதை என்பதால் அப்படி நினைக்கிறீர்கள். இது ரீமேக் இல்லை. நான் ரீமேக் படங்களில் நடிப்பது இல்லை.” என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments