Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பொன்னியின் செல்வன்’’ பட ஆடியோ ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதா?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (16:11 IST)

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதாக தகவல் வெளியாகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது.

மிக பிரமாண்ட பட்ஜெட்டில், இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு ஜூலை மாதத்தில் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடப்பதாக பேச்சு எழுந்தது.

அதன்படி, ஆடியோ வெளியீடு தேதிஜூலை 7 ஆம் தேதி அந்த விழா நடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் பட டீசர் உருவாக்கதிதில் படக்குழுவுக்கு திருப்தி இல்லை எனவும் அதனால், மற்றோரு டீசர் உருவாக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும்,  இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து வந்ததும், டீசர் வெளியீடு தேதியை வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் தன் கருத்தைக் கூறி மீண்டும் ஷூட்டிங் நடத்தும்படி கூறிய நிலையில் இப்படத்தின் டீசர் ரீலீச் தள்ளிப்போயுள்ளது.

இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments