Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்? - இதுதான் படத்தின் கதையா?

Webdunia
புதன், 3 மே 2017 (09:56 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் பெறும் சில காட்சிகள் இடம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
இப்படத்தின் முதல் பாகமான எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். தற்போது, அவர் அதிக படங்களில் நடிப்பதில்லை. ஆனால், எந்திரன் படத்தின் தொடர்ச்சியான 2.0-வில், ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் இல்லாமல் எப்படி கதை நகரும் என யோசித்த ஷங்கர் அதற்காக சில யுக்திகளை கையாண்டுள்ளார்.அதாவது, விஞ்ஞானி வசீகரனிடம் அடிக்கடி அவர் தொலைபேசியில் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். ஒரு சில குளோஸ் அப் காட்சிகளை அவரை வைத்து படம்பிடிக்கவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும், முதல் பாகத்தில், வசீகரன் தயாரித்த சிட்டி வில்லனாக மாறி பல குடைச்சலை கொடுத்ததால், இந்த பாகத்தில் நிலா (எமி ஜாக்சன்) எனும் உணர்ச்சிகளே இல்லாத பெண் ரோபோவை அவர் உருவாக்குவது போலவும்,  அந்த பெண் ரோபோவால் ஏற்படும் பிரச்சனைகளே கதைக்களம் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments