Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம்" -நடிகர் ரஜினி

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (19:13 IST)
இனி ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோயிலுக்கு வருவேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி  பால ராமர் சிலைக்கு பூஜை செய்தார். அதன்பின்னர்,  உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளு நர் ஆனதிபென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண், அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி,  நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனி ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோயிலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

''வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம். ராமரின் சிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோயிலுக்கு வருவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது ரஜினிகாந்துடன் , சச்சின் டெண்டுல்கர் எடுத்துக் கொண்ட  செல்பி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

யார் வந்தா என்ன?... வணங்கான் படத்தை துணிந்து இறக்கும் இயக்குனர் பாலா?

அடுத்த கட்டுரையில்
Show comments