Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சிவ சிவா’ டைட்டிலை மாற்றிய சுசீந்திரன்: புதிய டைட்டில் என்ன?

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (11:04 IST)
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்த 'சிவ சிவா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
 
ஜெய் நடிப்பில் ’சிவ சிவா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த திரைப்படத்தை பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக்குழுவினர்களின் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள். 
 
இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் ’சிவ சிவா’ திரைப்படத்திற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் இன்னும் இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய ஆலோசனையில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர் அவர்களின் சம்மதத்துடன் என் உதவியாளர்களுடன் ஆலோசித்து ’சிவ சிவா’ என்ற தலைப்பை மாற்றி ’வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments