Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆன ஜெயிலர் போஸ்டர்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:26 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஸ்டில் ஒன்றை வெளியிட்டு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments