Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

Advertiesment
Jana nayagan audio launch

Bala

, செவ்வாய், 25 நவம்பர் 2025 (19:35 IST)
விஜய் நடிப்பில் அனைவர் எதிர்பார்க்கும் உள்ளாகிய திரைப்படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மமீதா பைஜூ, பாபி தியோல் என முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
தளபதி கச்சேரி என தொடங்கும் அந்த பாடல் விஜய்க்கு ஒரு ஃபேர்வெல் பாடலாக அமைந்திருந்தது. சினிமாவில் விஜய்க்கு இதுதான் கடைசி படம் என்பதால் முக்கிய படமாகவும் இது கருதப்படுகிறது. அதனால் இதுவரை விஜய் படத்தில் இல்லாத அளவுக்கு இதில் சில சிறப்பம்சங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடப்பதாகவும் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.
 
அதில் இதுவரை விஜய் நடித்த படங்களில் இருந்து குறிப்பிட்ட சில பாடல்களை அந்த மேடையில் ஒரு சின்ன கான்செர்ட்டாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதனால் அந்தப் படத்தில் யாரெல்லாம் பாடினார்களோ அவர்களே அந்த நிகழ்ச்சியில் வந்து பாடப் போவதாகவும் தெரிகிறது .அதுமட்டுமல்ல இது விஜயின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால் அந்த விழாவிற்கும் பல முக்கிய பிரபலங்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் படத்தின் போஸ்டர் முதல் பாடல் என அடுத்தடுத்து அப்டேட் வந்த நிலையில் அடுத்ததாக படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் இரண்டாவது பாடலை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள் .அதற்குப் பிறகு விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட போகிறாராம். கடைசியாக அனைவரும் எதிர்பார்க்கும் விஷயம் படத்தின் டிரைலர். அதை புது வருட பிறப்பு அன்று அதாவது ஜனவரி 31 நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிட இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி இருக்கிறது.
 
டிரெய்லரில்தான் படத்தில் என்ன மாதிரியான விஷயம் இருக்கப் போகிறது என்பது பற்றி ஒரு ஐடியாவே கிடைக்கும். இசை வெளியீட்டு விழாவின் மூலம் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியிலும் படக்குழு இறங்கியிருக்கிறார்கள். இதுவரை எந்தவொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் ஒரு லட்சம் ரசிகர்கள் பார்வையாளர்களாக வந்ததில்லை. ஆனால் மலேசியாவில் நடக்கும் இந்த விழாவிற்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வர இருப்பதாக தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!