அகிலன் திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் துறைமுகம் சார்ந்த ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய பணிகள் நடந்த நிலையில் இப்போது படத்துக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலில் படமாக்கப்பட்டுள்ளதால் சில தடையில்லா சான்றிதழ்களை பெறவேண்டி உள்ளதாம். அதனால் அதற்கான பணிகளில் இப்போது படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.