Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநகர தியேட்டரிலேயே 300 ரூபாய் விலையா?.. ரசிகர்களிடம் கொள்ளையடிக்கும் திரையரங்கு..!

vinoth
திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:41 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இன்னும் 3 தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கியது. விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் டிக்கெட் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆன்லைனிலேயே விற்பனை நடக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள தனித்திரையரங்கான C R திரையரங்கத்துக்கு அரசு நிர்ணயித்த டிக்கெட் விலை 100 ரூபாய்தான். ஆனால் அவர்கள் கோட் படத்தின் டிக்கெட் விலை 300 ரூபாய் என அறிவித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சிறு நகர தியேட்டரிலேயே இவ்வளவு விலையேற்றி விற்கப்படுகிறது என்றால் நகர்ப்புற தியேட்டர்களில் எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டு விற்கப்படும் என அதிர்ச்சியாக உள்ளது.

அரசியல் வாதியாக ஆகிவிட்ட விஜய் தன்னுடைய படங்களின் மூலம் இப்படி நடக்கும் அநியாயக் கொள்ளைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அவர் மீது விமர்சனங்கள் எழ வழிவகை செய்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

யார் வந்தா என்ன?... வணங்கான் படத்தை துணிந்து இறக்கும் இயக்குனர் பாலா?

அடுத்த கட்டுரையில்
Show comments