Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தின் ஓரு பகுதி செயல்படவில்லை…. வித்தியாசமான நோயால் அவதிப்படும் பாடகர் ஜஸ்டின் பெய்பர்

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (09:29 IST)
கனடா நாட்டைச் சேர்ந்த பாடகரான ஜஸ்டின் பெய்பர் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர்.

தற்போது 28 வயதாகும் பெய்பர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்சே ஹண்ட் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகத்தின் ஒரு பகுதி மட்டும் செயல்களை இழக்கும்.

அந்த வீடியோவில் பெய்பர் “நீங்கள் பார்ப்பது போல், இந்த கண் சிமிட்டவில்லை, என் முகத்தின் இந்த பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது, இந்த நாசி அசையாது. எனவே, என் முகத்தின் இந்தப் பக்கத்தில் செயல்பாடு இல்லை. அதனால் நான் அடுத்த நிகழ்ச்சிகளை ரத்து செய்வதால் விரக்தியடைந்தவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் ‘நான் உடல் ரீதியாக, வெளிப்படையாக, அவற்றைச் செய்ய முடியத நிலையில் இருக்கிறேன்’. இது மிகவும் தீவிரமானது, நீங்கள் பார்க்க முடியும்." எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. பலரும் ஜஸ்டினுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Justin Bieber (@justinbieber)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments