Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்தால் மீண்டும் தள்ளிப்போகும் திரைப்படம்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (17:32 IST)
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமே இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருப்பதால் களத்தில் சந்திப்போம் திரைப்பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாரவிடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என சொல்லப்பட்ட ஜீவா மற்றும் அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் ரிலிஸில் இருந்து பின் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி 28 ஆம் தேதி கபடதாரி திரைப்படம் மட்டுமே ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments