Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் முக்கிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (16:53 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர்  நடிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில்  வெளியான படம் விக்ரம். இப்படம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் குவித்து, கமலின் சினிமா கேரியலில் முக்கிய படமாக அமைந்தது.

தற்போது, ஷங்கர் இயக்கத்தில்,   இந்தியன் 2 ல் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, அமிதாப், பிரபாஸ், தீபிகா படுகோன்  நடிப்பில் பிராஜக்ட் கே படத்தில் கமல்ஹாசன்  நடிக்க உள்ளார்.

இந்தப்  படத்திற்குப் பின், கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

ஏற்கனவே  வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்,   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள்   நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ்  இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், HE KNOWS THE WAY, HE  SHOWS THE WAY  என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments