Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுடன் இணைந்தார் சீயான் விக்ரம்

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (04:07 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் பணியில் உள்ளார். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன் அவர் சபாஷ் நாயுடு' படத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் ரீமேக் படமாக அமையவுள்ள இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார். இதே ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவான 'தூங்காவனம்' திரைப்படமும் ஒரு பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments