Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக சர்வதேச அளவில் ஃபைனான்ஸ் திரட்டும் கமல்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் கமல்ஹாசன் பைனான்ஸ் திரட்டி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடிக்கு மேல் என்பதால் இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்ய உள்ளூர் பிரபலங்கள் யாரும் முன்வரவில்லை. இதனை அடுத்து கமலஹாசன் சர்வதேச பைனான்ஸியர்களிடம் முயற்சி செய்து வருவதாகவும் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரின் உதவியால் கிட்டத்தட்ட பைனான்ஸ் உதவியை அவர் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது
 
எனவே லாக்டவுன் முடிந்தவுடன் ரஜினி கமல் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அதே நாளில் கமல்ஹாசன் நடிக்கும் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் என்று கூறப்படுகிறது
 
ஏற்கனவே கமலஹாசன் தனது ’மருதநாயகம்’ படத்திற்காக சர்வதேச பைனான்ஸ் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

பெண்கள் விஷயத்தில் தவறானவர் கே.பாலசந்தர்.! சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!!

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments