Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் அஞ்சாத துணிச்சலின் அடையாளம்: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (10:28 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து இருப்பதாவது
 
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
 
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.
 
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments