Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனால் தள்ளிப் போகும் பிரபாஸின் கல்கி ஏடி 2898!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:13 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் படக்குழுவினரோடு கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 12, 2024 என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது அறிவித்த தேதியில் படம் ரிலீஸாக வாய்ப்புகள் இல்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கமல்ஹாசன் இன்னும் இந்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கவில்லையாம். அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் ஷூட் மற்றும் பிக்பாஸ் என பிஸியாக இருந்து வருகிறார். இதனால் ஷூட்டிங் முடிந்து படம் ரிலீசாக தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments